Friday, March 9, 2007

தகவல் தொழில்நுட்பம்...எளிய தமிழில்!

நண்பர்களே...ஆங்கிலத்தில் மட்டும் தான் கற்க முடியும் என்றிருந்த தகவல் தொழில்நுட்பத்தை தமிழின் தத்துப்பிள்ளையாக்கும் முயற்சியில் நம்மவர்கள் வெற்றி கண்டு வருகின்றனர். ஆனால் இன்றளவும் ஆங்கிலத்தில் வியாபித்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்தை தமிழில் அப்படியே அளிக்கவேண்டும் என்பதற்காகாக, நகல் எடுக்கும் பணியில் தான் நம்மில் பலர் ஈடுபட்டுள்ளனர்....இது ஏன்? தமிழில், தமிழர்க்காக படைக்கப்படும் அறுசுவை விருந்தில், இத்தாலிய பிட்சாவுக்கு முதன்மை இடம் அளிப்பது போல,தகவல் தொழில்நுட்பத்தை தமிழில் இப்படித்தான் அளிக்கவேண்டும் என தேவையில்லாத கட்டுப்பாடுகள் வைத்துக்கொண்டிருந்தால் எப்படி.. அருகில் நிபுணர் ஒருவர் அமர்ந்து தாய்மொழியில் கணினியைக் கற்றுத்தருவது போல, தொழில்நுட்பங்களும் தமிழில் எளிமையாக இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் பிரயாசம்...இந்த ஏக்கம், ஆதங்கம் உங்களுக்கும் இருந்தால்... வாருங்கள் கைகோர்ப்போம்!

8 comments:

Unknown said...

என் பிரிய பிரேம்,
தமிழன் என்றைக்கு தமிழுக்கு முதல் மரியாதை அளிக்க முனைகிறானோ, அன்று தான் நம்மவரின் ஆதங்கம் தங்கமாக மாறும். இன்றும் தன் குழந்தைக்கு ஆங்கிலத்திலேயே பால் கொடுத்து, பல்தேய்த்து, பிரேக்ஃபாஸ்ட் படைக்கும் பெற்றோர்தான் இதன் முட்டுக்கட்டைகள். பேச்சு மொழியிலும், நடை மொழியிலும் தமிழில் உரையாடும் ஆர்வம் நம் ECR இளைஞர்களுக்கு எழ வேண்டும். "ஹை டா, ஐ ட்ரைடு டூ மீட் யூ யா, தட் மூவி யா, சூப்பர் யா" போன்ற ஆயா இளைஞனைத் தான் நாம் முதலில் கவனிக்க வேண்டும்.

என்ன சொல்றீங்க தலைவா? இவன் சரியானாத்தான் அவன் பிள்ளை சரியாவான். தமிழும் சரியாகும். அதை சரி செய்யாமல் கன்னித்தமிழை கணினித்தமிழாக மாற்றுவது சாத்தியமில்லை.....

She said...

thangal muyarchikku vaazhthukkal prem avargale...innoru aziz premjiyaga varuvatharku iraivanai prarthikkurein... though i agree with ur post, remember - to strive for tamil is not to throw stone against any other language...so respect other languages as well and make ur effort a grand success!

ISR Selvakumar said...

Greetings!
Keep blogging!
I will regularly visit your blog.

My Journal said...

Nice prem..All the best and keep up your goodwork..

vetrida puridal said...

ஆகா!

சிங்கம் குகையில இருந்து கிளம்பிடுச்சு போல இருக்கு?

Anonymous said...

சிறப்பாக எழுதுறீங்க...

பத்தி பத்தியாக - கொஞ்சம் கேப் விட்டு எழுதினால் இன்னும் படிக்க எளிமையாக இருக்கும்...மேலும் பாண்ட் போல்ட்ல இல்லாமே சாதாரணமாக இருந்தாலும் நல்லாருக்கும்...

கீப் கோவிங்....

- யெஸ்.பாலபாரதி said...

வாங்க தல...வாங்க..

தொடர்ந்து படிக்கும் ஆவலில்...

R.DEVARAJAN said...

ஒரு நல்ல முயற்சி !!
என்னைப் போன்ற சற்று முந்தைய தலைமுறையினருக்குப் பயன் தரும் வகையில் அமைதல் நல்லது.
தேவ்