Friday, March 9, 2007

தகவல் தொழில்நுட்பம்...எளிய தமிழில்!

நண்பர்களே...ஆங்கிலத்தில் மட்டும் தான் கற்க முடியும் என்றிருந்த தகவல் தொழில்நுட்பத்தை தமிழின் தத்துப்பிள்ளையாக்கும் முயற்சியில் நம்மவர்கள் வெற்றி கண்டு வருகின்றனர். ஆனால் இன்றளவும் ஆங்கிலத்தில் வியாபித்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்தை தமிழில் அப்படியே அளிக்கவேண்டும் என்பதற்காகாக, நகல் எடுக்கும் பணியில் தான் நம்மில் பலர் ஈடுபட்டுள்ளனர்....இது ஏன்? தமிழில், தமிழர்க்காக படைக்கப்படும் அறுசுவை விருந்தில், இத்தாலிய பிட்சாவுக்கு முதன்மை இடம் அளிப்பது போல,தகவல் தொழில்நுட்பத்தை தமிழில் இப்படித்தான் அளிக்கவேண்டும் என தேவையில்லாத கட்டுப்பாடுகள் வைத்துக்கொண்டிருந்தால் எப்படி.. அருகில் நிபுணர் ஒருவர் அமர்ந்து தாய்மொழியில் கணினியைக் கற்றுத்தருவது போல, தொழில்நுட்பங்களும் தமிழில் எளிமையாக இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் பிரயாசம்...இந்த ஏக்கம், ஆதங்கம் உங்களுக்கும் இருந்தால்... வாருங்கள் கைகோர்ப்போம்!